tamilnadu

img

ஐபிஎல் : அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு

ரிக்கெட் உலகின் மிகப்பெரிய டி-20 லீக் தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் வரும் மார்ச் 29-ஆம் தேதி தொடங்குகிறது.  மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் தொடங்கும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை அணி - சென்னை அணியை எதிர்கொள்கிறது.  மே 17-ஆம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன் பின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்கும். 

மொத்தம் 57 நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடருக்கான உத்தேச அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதிகாரப்பூர்வ அட்டவணை செவ்வாயன்று வெளியிடப்பட்டது.  பிளே ஆப் மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்களின் அட்டவணை வெளியிடப்படவில்லை. எனினும் இறுதி ஆட்டம் மே 24-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டார். அட்டவணையை ஐபிஎல் அதிகாரப்பூர்வ அலுவலக தளத்தில் (www.ipl.official.website.com) பார்க்கலாம்.