இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள்மோதிய 8-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை ருசித்தது.தொடக்க ஓவர் முதல் இரண்டாம் பேட்டிங்கின் பவர் பிளே வரை ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இது இந்திய அணிக்குத் தொடக்க ஆட்டம் என்றாலும்பதற்றமாக இல்லாமல் கூலாக விளையாடி யது. தென் ஆப்பிரிக்க அணி ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்தாலும் இந்திய அணிக்கெதிராக புதிய புத்துணர்ச்சியுடன் விளையாடி பார்ம் பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டது. குறிப்பாக இந்திய அணிக்கெதிராக போராட்ட குணத்தை வெளிப்படுத்திய தென்ஆப்பிரிக்க அணி அடுத்து வரும் ஆட்டங் களில் கண்டிப்பாக வெற்றி நடையுடன் வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.