இன்று தொடக்கம்
தென் ஆப்பிரிக்க கிரிக் கெட் அணி 3 டி-20, 3 டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டி களைக் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் தர்மசாலா (இமாச் சல்) மைதானத்தில் ஞாயிறன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியால் ஏற்பட்ட கலங்கத்தை சரிக்கட்டும் முனைப் பில் இரு அணிகளும் களமிறங்கு வதால் தர்மசாலா டி-20 ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும் தர்மசாலா நகரில் அவ்வப்போது சாரல் விழுந்த வண்ணம் உள்ள தால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.