tamilnadu

img

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. பரபரப்பான கட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் வியாழனன்று தொடங்குகிறது. மகளிர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர் ஆகிய பிரிவுகளுக்கு வியாழனன்றும், ஆடவர் ஒற்றையர், மகளிர் இரட்டையர் முக்கிய பிரிவுகளுக்கு வெள்ளியன்றும் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. கலப்பு இரட்டையர் பிரிவுக்கு மட்டும் புதனன்று இரவே அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கி விட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் வழக்கம் போல முன்னணி வீரர்கள் அரையிறுதிக்கு நுழைந்துள்ளனர். ஆனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் கத்துக்குட்டி வீராங்கனைகள் சிலர் முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.