tamilnadu

img

இந்திய சுற்றுப் பயணம்: தென்னாப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸுக்கு இடம்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ் மற்றும் வான் டெர் துஸ்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்னாப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ் இடம் பிடித்துள்ளார். அவருடன் வான் டெர் துஸ்சனும் இடம் பிடித்துள்ளார்.