கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில் அணியப்படும் ஜெர்சி (வீரர்களின் உடை) விளம்பரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய அணி தான் முதலிடத்தில் உள்ளது. ஏனென்றால் இந்திய நாட்டின் பெயரை விட விளம்பர நிறுவனத்தின் பெயர் தான் ஜெர்சியில் பெரிதாகவும், அதிக இடங்களில் (3) காணப்படும். ஆனால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நாட்டின் பெயருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும். சொல்லப்போனால் விளம்பரத்தை முன்பக்க பகுதியில் அச்சிட விரும்பாது. கை மற்றும் பின்புறம் தான் விளம்பர எழுத்துக்கள் இருக்கும்.