tamilnadu

img

வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் போராட்டம் வாபஸ்

கிரிக்கெட் வாரிய வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் தருவது மற்றும் கிரிக்கெட் வீராங் கனைகளுக்கும் சம ஊதியம் வழங்கு வது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹாசன் தலைமையில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒருவாரமாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் இந்திய அணிக் கெதிரான கிரிக்கெட் தொடர் ரத்தாகும் என எதிர்பார்க்கப்  பட்ட நிலையில், செவ்வாயன்று இரவு நடந்த பேச்சு வார்த்தை முடிவில் போராட்டம் வாபஸ் பெறுவதாக ஷாகிப் அல் ஹாசன் அறிவித்தார். வீரர்கள் பரிந்துரைத்த கோரிக்கை கள் விரைவில் நிறைவேற்றப்படும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதியளித்த நிலையில், இந்திய அணிக்கெதிரான டி-20, டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் வங்கதேச அணி பங்கேற்பது உறுதியாகிவிட்டது. இந்த தொடர் வரும் 3-ஆம் தேதி தொடங்குகிறது.