இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் வரும் 22-ஆம் தேதியுடன் முடிகிறது. இதன்பிறகு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இதில், ஆஸ்திரேலியா அணி இந்தியா எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 14-ஆம் தேதி அன்று மும்பையிலும், 2-வது போட்டி 17-ஆம் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் சுமித், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், ஆஸ்டன் அகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹாசில்வுட், ஸ்டார்க், ஆடம் சம்பா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஷான்மார்ஷ், நாதன் ஹோல்டர் நைல், ஸ்டோனிஸ், நாதன் லயன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பெஹரன் டார்ப் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.