tamilnadu

img

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் (சீனியர்) தலைமைப் பயிற்சியாளராக டி.வாசு, துணைப் பயிற்சியாளராக ஆர்.பிரசன்னா ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஓராண்டுக்கு (2019-20 சீசனுக்கு) பயிற்சியாளராக நீடிப்பார்கள்.சென்னையில் நடைபெற்ற (திங்களன்று) டிஎன்சிஏ செயற்குழுக் கூட்டத்தில் டி.வாசு, ஆர்.பிரசன்னா நியமனங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக டிஎன்சிஏ இணைச் செயலாளர் பழனி கூறியுள்ளார்.