2023 சீசனை ஆஸி.,- நியூஸி., இணைந்து நடத்துகிறது
மகளிருக்கான 8-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரை ஐரோப்பா கண்டத்தின் பிரான்ஸ் நாடு நடத்தியது. ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையை அமெரிக்கா கைப்பற்றியது. இந்நிலையில் 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை (2023) அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் நடத்த விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், ஆசியா - ஓசியானியா மண்டலத்தில் கால்பந்து வளரச் செய்வதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் உலகக்கோப்பையை இணைந்து நடத்த பிபா உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.