ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து விளையாட்டு உலகின் மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் கத்தார் நாட்டில் வரும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், 31 அணிகள் தகுதி சுற்று வெற்றியின் மூலம் தேர்வுசெய்யப்பட்டது. போட்டியை நடத்தும் கத்தார் நாடு சிறப்பு நுழைவில் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கிறது. அதிகபட்சமாக ஐரோப்பா கண்டத்தில் 13 அணிகள் பங்கேற்கின்றன.
குரூப் சுற்றுஉலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுக்கு மொத்தம் 8 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு குரூப்பில் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. |
|
குரூப் “ஏ” கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து |
குரூப் “இ” ஸ்பெயின், கோஸ்டாரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் |
குரூப் “பி” இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ் |
குரூப் “எஃப்” பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோசியா |
குரூப் “சி” ஆர்ஜெண்டினா, சவூதி அரேபியா, மெக்சிகோ, போலந்து |
குரூப் “ஜி” பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேம்ரூன் |
குரூப் “டி” பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா |
குரூப் “ஹெச்” போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா |
லீக் சுற்றில் 12 நாள்களுக்கு தினமும் 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கத்தார் தலைநகர் தோஹாவைச் சுற்றி பிரம்மாண்ட செலவில் 8 மைதானங்கள் பயன்படுத்த உள்ளன. |
அணிகள் விபரம் | |
ஐரோப்பா (13) |
பிரான்ஸ் (நடப்பு சாம்பியன்), சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, செர்பியா, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, குரோசியா, ஜெர்மனி, போர்ச்சுகல், போலந்து, வேல்ஸ் (64 வருடங்களுக்குப் பிறகு தகுதி) |
ஆசியா (6) |
ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, ஜப்பான், ஈரான், தென் கொரியா, கத்தார் (நேரடி தகுதி) |
தென் அமெரிக்கா (4) |
பிரேசில், அர்ஜெண்டினா, உருகுவே, ஈகுவடார். |
வட அமெரிக்கா (4) |
மெக்சிகோ, அமெரிக்கா, கோஸ்டாரிக்கா, கனடா (36 ஆண்டுகளுக்கு பிறகு) |
ஆப்பிரிக்கா (5) |
கேம்ரூன், கானா, செனகல், துனிசியா, மொராக்கோ |