tamilnadu

img

ஊக்க மருந்து சோதனையில் தோல்வி?

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள தொடரின் மகளிர் 800 மீ ஓட்டத்தில் திருச்சி அருகேயுள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். ஒவ்வொரு தொடர் நடந்து முடிந்தவுடன் வெற்றியாளர்களின் ரத்த மாதிரியைச் சோதனை செய்வது வழக்கம்.இந்த ஊக்க மருந்துப் பரிசோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி யடைந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.இந்த செய்தி குறித்து இந்தியத்தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்லே சுமாரிவல்லா, “தனக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவர வில்லை” என்று கூறியுள்ளார்.ஒலிம்பிக் மற்றும் இதர தொடர் களுக்காக போலந்து நாட்டில் நடைபெறும் சிறப்பு பயிற்சிக்கு கோமதி தேர்வு பெற்றிருந்த நிலை யில், ஊக்க மருந்துப் பிரச்சனையால் சிறப்பு பயிற்சி திட்டத்தில் அவருக்கு சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.