tamilnadu

செய்தித் துளிகள்

ஆட்சியருக்கு கொரோனா

காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர் களைத் தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனையடுத்து அவர் கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

திருமுருகன் காந்திக்கு தொற்று

மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

31 பேர் குடும்பங்களுக்கு நிவாரணம்

பல்வேறு நிகழ்வுகளில் பரிதாபமாக உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சசர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு: யாருக்கு அனுமதி?

ஊரடங்கு காரணமாக பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் போட்டிகளில் பங்கு பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டும் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்கள் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
பொன்னையா தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.