tamilnadu

img

பொறியாளருக்கு கொரோனா தாக்குதல்: காஞ்சிபுரத்தில் தீவிர கண்காணிப்பு

காஞ்சிபுரம், மார்ச் 8 - அரபு நாட்டில்  கட்டு மானத் துறையில் பணிபுரி யும் காஞ்சிபுரம் நகரை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கு தல் இருப்பதை உறுதி செய்திருப்பதால் அவரது குடும்ப உறுப்பினர்கள் 19 பேருக்கு விரைவு மீட்புக்குழு கண்காணிப்புடன் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்திருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் பழனி தெரி வித்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்த வர் ராமன் பெயர் மாற்றப் பட்டுள்ளது. ஓமன் நாட்டின் மஸ்கட்டில் கடந்த 12 வருட மாக கட்டுமானத் துறையில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 27 ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த அவருக்கு காய்ச்சல் அதிகமானது. உடனே சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். பிறகு அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து, தனி அறையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். காஞ்சி புரத்தில் அவர் தங்கியுள்ள  பகுதிகளிலும் அவருடைய உறவினர் வீடுகளிலும் காஞ்சிபுரம் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சுகாதார நட வடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர் பழனி செய்தியாளர்களிடம் கூறும்போது, ராமன் குடும்பத்தைச் சேர்ந்த 19  பேரையும் சோதனை செய்தோம். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஆனா லும், அவர்கள் தொடர் கண் காணிப்பில் வைக்கப்பட்டு ள்ளனர்” என்றார். செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, “ராமன் குடும்பத்தினர் விரைவு மீட்புக் குழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

;