காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சிறப்பு சேம நலநிதி, ஓய்வூதியம், பணி ஓய்வு உத்தரவு போன்றவற்றை வலியுறுத்தியும், ஊழியர்களை மிரட்டுவதைக் கண்டித்தும் ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.