tamilnadu

img

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி, ஜன. 23- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வறட்சி யால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் காப்பீடு  செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்  தர வலியுறுத்தியும் காப்பீடு செய்வதில் உள்ள  முறைகேடுகளை சரி செய்யக்கோரியும் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகை சுமார் ரூ. 192 கோடியை வட்டியு டன் வழங்க வேண்டியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் சின்னப்பா தலைமையில் மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.