tamilnadu

img

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துக கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரண்குராலா வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி,மார்ச் 17- கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  ஆட்சியர் கிரண் குராலா தலைமையில் நடை பெற்றது. அரசு அலுவலகங்க ளுக்கு வரும் பொதுமக்க ளுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவேண்டும். அலு வலக வளாகங்களில் எவ ரேனும் சிறிதளவு உடல் சோர்வு, காய்ச்சல், தும்மல், இருமல் மற்றும் மூச்சுத்திண றல் உள்ளிட்ட அறிகுறிக ளோடு தென்பட்டால் உடனடி யாக அவரை மருத்துவ மனைக்குச் செல்ல அறி வுறுத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களி லும் கிருமிநாசினி பயன்படுத்தவேண்டும்.  அனைத்து திருக்கோயில் களுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும், கழி வறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா வலியுறுத்தினார். மேலும், வணிக வளா கங்கள்,பேருந்து நிலையங் கள், ரயில் நிலையங்கள், அன்னதானக் கூடங்கள், தங்கும் விடுதிகள், திரை யரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கிருமி நாசினிகள் மற்றும் பிளிச்சிங் பவுடர்களைக் கொண்டு அவ்விடங்களை சுகாதார மாக வைத்துக்கொள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் வணிகவரித்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவல கங்களிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்தி டும் வகையில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அனைத்து உணவ கங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு சுவரொட்டி கள் ஒட்டப்பட வேண்டும். அனைத்து உணவகங்களி லும் சுத்தமான முறையில் உணவுகள் மற்றும் குடிநீர் வழங்குவதையும் மற்றும் தூய்மையான முறையில் பாத்திரங்கள் பயன்படுத் தப்படுவதை அலுவலர்கள்  ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் தெரி வித்தார். போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மக்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான அரசு வாகனங் களில் நோய் எதிர்ப்பு மருந்துகளை உபயோகித்து அனைத்து பேருந்துகளை யும் முழுமையாக சுத்தப்படு த்தி பராமரிக்க வேண்டும் என ஆட்சியர்கள் அறிவுறுத்தி னர்.