சங்கராபுரம், பிப். 22- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றி யத்துக்கு உட்பட்ட செம் பராம்பட்டு- அரசம்பட்டு. இணைப்பு தார் சாலையை புதுப்பிக்கும் பணி ரூ. 34 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கப்பட்டு பணி நிறை வடைந்துள்ளது. நிறை வடைந்த நான்கு நாட்களில் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் உள்ளது. எனவே தரமற்ற சாலை அமைத்து உள்ளதை கண்டித் தும், இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரி யும், தரமான சாலை அமைத் திடக் கோரியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் பூட்டை கிளை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இச்சாலை மறியல் போராட்டத்தில் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, வட்டத் தலைவர் க.பாஸ்கர், வட்டச் செயலாளர் வெங்க டேசன், வட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் மற்றும் பூட்டை கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.