tamilnadu

img

தட்டில் விழும் காணிக்கை இனி அர்ச்சகர்க்கு இல்லை!

பெங்களூரு:
கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கத் தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் ,இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில், அறநிலையத்துறை கோயில் களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில்தான், அவர் களின் கோரிக்கையை ஏற்று, கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு 6-ஆவது ஊதியகுழு அடிப்படையில் சம்பள உயர்வுஉள்பட பல சலுகைகள் வழங்கப் படும் என்று கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

மேலும், இவ்வாறு முறைப்படியான ஊதிய முறைக்குள் வந்துவிட்டதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆரத்தி தட்டில் போடும் காணிக்கையை, அர்ச்சகர்கள் இனிமேல் எடுக்கக்கூடாது என்றும்அவற்றை கோயில் வருமானத் தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

;