tamilnadu

img

இலவச கொரோனா பரிசோதனை : பெங்களூரு மாநகராட்சி முடிவு

 பெங்களூரு,ஆக.2- பெங்களூரு மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை செய்ய அம்மாநகராட்சி முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறியதாவது:- பெங்களூருவில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த விரும்புவது இல்லை. இதன்காரணமாக மாநகராட்சி சார்பில் 8 மண்டலங்களிலும் பெங்களூரு மக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து உள்ளோம்.  இது தொடர்பாக மண்டல அலுவலக செல்போன் எண் களை தொடர்பு கொண்டு மக்கள் இலவச கொரோனா பரிசோதனை குறித்து தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.  70 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை நகர்  முழுவதும் அனுப்பி உள்ளோம். இலவச கொரோனா பரிசோத னை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெங்களூருவில் 12,668 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கூறினார்.