tamilnadu

img

கொலைக் குற்றவாளி ஆதரவுடன் ஹரியானாவில் பாஜக ஆட்சியா?

சண்டிகர்:
ஹரியானாவில் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில் சுயேட்சைகளை வளைத்துப் போட்டாவது அதிகாரத்திற்கு வந்துவிட வேண்டும் என்று பாஜக வேலையில் இறங்கியுள்ளது. அவ்வாறு பாஜக ஆதரவு கேட்டு நாடிய சுயேட்சை எம்எல்ஏ-க்களில் கோபால்கந்தா என்பவரும் ஒருவராவார். ஏனெனில்,சுயேட்சை எம்எல்ஏ-க்கள் 6 பேர் கோபால் கந்தா தலைமையில்தான் அணிவகுத்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரை தங்களுக்கு ஆதரவாக கொண்டுவருவதன் மூலம் அனைத்து சுயேட்சைகளையும் கொண்டு வந்து விடலாம் என்பது பாஜக-வின் கணக்காக உள்ளது.காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தனிக் கட்சி கண்ட கோபால் கந்தா,பாஜகவை மிகக் கடுமையாக  விமர்சித்தவர்.இதனால், கோபால் கந்தாவின் ஆதர வைப் பெறுவதற்கு, பாஜகவுக்கு உள்ளே இருந்தே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுவும் சாதாரணமான நபரிடமிருந்து அல்ல, மூத்த தலைவர் உமா பாரதியிடமிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோபால் கந்தாவின் ஆதரவை ஏற்கக் கூடாது என்று 
வெளிப்படையாக டுவிட்டர் பதிவுகள் மூலம் உமாபாரதி தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“சுயேட்சை வேட்பாளர் கோபால் கந்தா என்பவர் நமக்கு ஆதரவு தருவதாக நான் கேள்விப்பட்டேன்.

அவரைப் பற்றி நான் சில விஷயங்களை சொல்லியாக வேண்டும்.சிக்கிம் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி வாகை சூடிய ஒரு பெண்ணின் தற்கொலைக்கும், அவரது தாயாரின் தற்கொலைக்கும் காரணமாகி, அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சிக்கி கைதாகி ஜாமீனில்வெளியே வந்தவர்தான் கோபால் கந்தா.இந்த வழக்கு இன்னும் கூட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோபால் கந்தா அப்பாவியோ அல்லது கிரிமினலோ அதைப் பற்றி நீதிமன்றம் தீர்மானித்துக் கொள்ளட்டும். சாட்சிகள் அடிப்படையில் அது நிரூபிக்கப்படும். ஆனால் ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்தால் அவர் அவரது குற்றச் செயலிலி ருந்து விடுபட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது. நிரபராதி என்று கூறி விட முடியாது.” இவ்வாறு உமாபாரதி கூறியுள்ளார்.உமா பாரதியின் இந்த டுவிட்டர் பதிவுகள், ஹரியானா மாநில பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

;