tamilnadu

img

கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கொரோனா.... மத்திய சுகாதாரத் துறை தகவல் 

தில்லி 
ஊரடங்கு விதித்து தீவிர மத்திய, மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் சுழன்றாலும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த  24 மணிநேரத்தில் மட்டும் 693 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக  மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது,"கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,445 பேர் தப்லீக் ஜமாத்துடன் தொடர்புடையவர்கள். 76 சதவீதம் ஆண்களுக்கும், 24 சதவீதம் பெண்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 109 ஆக உள்ளது. பலியானவர்களில் 63 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 30 சதவீதம். 40 வயதுக்கும் குறைவானவர்களில் பலியானோரின் எண்ணிக்கை 7 சதவீதம். மாநிலங்களுக்கான தேசிய நல்வாழ்வு ஒதுக்கீட்டிலிருந்து ரூ. 1,100 விடுவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 3,000 கோடி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது."  எனக் கூறினார். 

;