tamilnadu

பிப்.2-ல் கரூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கையெழுத்து இயக்கம்: அனைத்துக் கட்சியினர் பங்கேற்பு

கரூர், ஜன.30- கரூரில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் எந்த முயற்சியையும் எடுக்கக் கூடாது. தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகளை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் வீடு, வீடாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் பிப். 2-ஆம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. கரூர் நகரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, பள்ளப் பட்டியில் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி, க.பரமத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, தோகை மலையில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர்,  வேலாயுதம் பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்தினம், வெள்ளியணையில் மதிமுக மாவட்ட செயலாளர் கபினி சிதம்பரம், வாங்கலில் விசிக மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கையெழுத்து இயக் கத்தை துவக்கி வைக்கவுள்ளனர். இந்த இயக்கம் மாவட்டம் முழு வதும் 21 இடங்களில் நடை பெறுகிறது.

;