tamilnadu

குறைந்தபட்ச பென்சன் ரூ.7850 வழங்க சத்துணவு ஓய்வூதியர்கள் கோரிக்கை 


கரூர், ஜன.25- சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதி யர்கள் பிப். 17ஆம் தேதி, தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு வது என கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கரூரில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.நாராயணன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் இ.மாய மலை வேலை அறிக்கை மற்றும் எதிர்கால பணிகள் குறித்து பேசினார். மாநில பொரு ளாளர் ஜி.ஆனந்தவல்லி வரவு- செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சாமுவேல் சுந்தரபாண்டியன், சத்து ணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகி யோர் பேசினர். அரசு பென்சன் சட்ட விதிகளுக்குட்பட்டு, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ 7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். மேலும் அகவிலைப் படி, மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம், இல வச பேருந்து பயண அட்டை, ஈமக்கிரியை செலவு நிதி உள்ளிட்ட ஓய்வுக்கால பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி பிப். 17ஆம் தேதி, தமிழகத்தில் உள்ள 585 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு, லட்சம் பேர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

;