tamilnadu

கரூர், திருவாரூர் முக்கிய செய்திகள்

தாக்கி பணம் பறிக்க முயற்சி 
கரூர், அக்.1- கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் அரசு மதுபானக் கடை எண் 5029- செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையில் மேற்பார்வையாளராக வெங்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் வாங்கல் அருகிலுள்ள கர்ப்பம் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமாரும், விற்பனையாளராக வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று விற்பனையை முடித்து விட்டு இரவு சுமார் 12 மணி அளவில் கடையை பூட்டி விட்டு தங்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். இதில் மர்ம நபர்கள் இரண்டு பேர் கடையை பூட்டி விட்டு வந்த மூவரையும் வழிமறித்து அவர்களை தாக்கி கத்தியை காட்டி அவர்கள் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி உள்ளனர். ஆனால் பணப்பையில் ரூ500 மட்டுமே இருந்துள்ளது. மற்றவரிடம் விற்பனை செய்த பணம் சுமார் ஒரு லட்சத்தி 14 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. ஆனால் மர்ம நபர்கள் அந்த பணத்தைப் பறிக்கும் முன்பாகவே மூவரும் சுதாரித்து விட்டனர்.  மூவரும் சுதாரித்ததை அறிந்த மர்ம நபர்கள் உடன் தப்பித்துச் சென்றனர். இவர்கள் திட்டமிட்டு இந்த சதி செயலை செய்வதற்காகவே கண்காணிப்பு கேமராவில் தங்கள் உருவம் பதிந்து விடாமல் இருப்பதற்காக மின்தடையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து இருந்தது. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம சபைக் கூட்டம்
திருவாரூர், அக்.1- கிராம சபை கூட்ட நடவடிக்கைகள் வாயிலாக பயன் பெறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 430 கிராம ஊராட்சிகளிலும் 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைகூட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன் னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.