கரூர், மே 16- சிஐடியு சங்க கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: சிஐடியு கரூர் மாவட்ட அலுவலகச் செயலாளர், மாவட்ட பொருளாளர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு உறுப்பி னர் பல்வேறு பொறுப்புகளை வகித்த தோழர் கே.எஸ்.மணி (வயது 72) உடல் நலக்குறைவு காரணமாக தென்காசி யில் உள்ள தனது இல்லத்தில் கால மானார். தோழர் மணி ஒன்றுபட்ட கன்னியா குமரி மாவட்டத்தில் கைத்தறி தொழிலா ளியாக தனது வாழ்க்கையை துவக்கிய வர். கைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு ஆறு மாதத்திற்கு மேல் சிறை வாசம் அனுபவித்தவர். 1980- களில் கரூருக்கு தன் குடும்பத்தோடு புலம் பெயர்ந்து வந்தார்.
1990 இல் சிஐடியு சங்கத்தில் முழு நேர ஊழியராக தன்னை இணைத்து கொண்டார். சிஐடியு மாவட்ட பொருளாளராக, அலுவலக செயலாளராக, கட்டுமானம் மற்றும் பொது சங்கங்களின் பொருளா ளராகவும் பொறுப்பேற்று 2016 வரை தொடர்ந்து திறம்பட அலுவலகத்திலேயே தங்கியிருந்து செயல்பட்டார். அவர் பொறுப்பேற்ற சங்கங்கள், மாவட்ட சிஐடியுவின் அன்றாட வரவு, செலவினை இரவு எத்தனை மணியானா லும் முடித்து விட்டுத் தான் உறங்கச் செல்வார். வயது மூப்பின் காரணமாக 2016 இல் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர் தங்கி யிருந்த பகுதியில் முறைசாரா உறுப்பி னர்களை சிஐடியு-வில் உறுப்பினராக்கு வதில் தனது இறுதி காலம் வரை பணியாற்றினார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும், சிஐடியு கரூர் மாவட்டக்குழு சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.