tamilnadu

சேரன் பள்ளி மாணவர்கள் சாதனை

கரூர், ஏப்.20-பிளஸ்-2 தேர்வில் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர். பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இப்பள்ளி மாணவர் பி.மனோஜ் 591 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவர் கே.சதீஷ் 579 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும், மாணவி ஆர்.சினேகலதா 576 மதிப்பெண் பெற்று 4-ம் இடத்தையும் பிடித்தனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி ஆலோசகர் பி.செல்வதுரை, பள்ளி நிர்வாகி பெரியசாமி, தாளாளர் பாண்டியன், பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். தேர்வில் 549 பேர் எழுதியதில் 549 பேரும் தேர்ச்சி பெற்றனர். கணக்குப் பதிவியல் பாடத்தில் 9 பேரும், கணிணி அறிவியலில் 7 பேரும், வணிகவியலில் 6 பேரும், கணிதத்தில் ஒருவரும் என மொத்தம் 23 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.