tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கும் அரசு பணிகளை அவுட்சோர்சிங் விடுவதற்கும் எதிர்ப்பு அனைத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் - மறியல்

கரூர், ஜன.9- தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, மத்திய  - மாநில அரசுகளை கண்டி த்தும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், அரசு பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, அரசு பணிகளை அவுட்சோர்சிங் விடுவதை கைவிட வேண்டும், தொழிலாளர் நலச் சட்டத்தில் 44-ஐ நான்கு  பிரிவுகளாக மத்திய அரசு பிரித்துள்ளதை கண்டித்தும், அதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி  சிஐ டியு, தொமுச, ஏஐசிடியு, ஐஎன்டியுசி, ஹச்எம்எஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட பல்வேறு மத்திய சங்கங்க ளின் சார்பில் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடைபெற்றது.  கரூர் ஆர்எம்எஸ் அலுவ லகம் முன்பு தொமுச மாவ ட்டத் தலைவர் அண்ணா துரை தலைமையில் மாவ ட்டச் செயலாளர் ஜி.ஜீவா னந்தம், மாவட்டச் செயலா ளர் சி.முருகேசன், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு, ஐஎன்டியுசி மாநிலச் செயலாளர் அம்பளவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஒன்றியக் குழு சார்பில் பள்ளபட்டி கனரா வங்கி முன்பு கட்டு மான சங்க மாவட்டச் செயலா ளர் சி.ஆர்.ராஜாமுகமது தலைமை வகித்தார். கட்டு மான சங்க மாநில பொதுச் செயலாளர் டி. குமார் மறியலை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தோகைமலை
இடதுசாரி கட்சிகளின் தோ கைமலை ஒன்றியக் குழு சார்பில் தோகைமலை பேரு ந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியச் செயலாளர் கே.சக்திவேல் தலைமை வகி த்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.சுப்பி ரமணியன் தலைமை வகித்தார்.

;