கரூர், பிப்.15- 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழலுக்கு ஆதாரம் திரட்டிய தற்காக வெள்ளியணை காவல் நிலையத்தில் தொடர்ந்த பொய் புகாரை திரும்ப பெற வேண்டும் பழிவாங்கும் நடவடிக்கையாக மாநில பொருளாளர் உட்பட 6 முன்னணி தொழிற்சங்க ஊழி யர்கள் மீதான சட்ட விரோத தற்கா லிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். கோவை மண்டலத் தலைவர் சரவணன் போராட்டத் தை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன், செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர் போராட் டத்தை வாழ்த்திப் பேசினர். 108 ஆம்புலன்ஸ் தொழிலா ளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநி லத் தலைவர் வரதராஜன், பொரு ளாளர் சாமிவேல், துணைத் தலை வர் சிவகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். உழைக்கும் மக்கள் பேரியக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரேம் குமார் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். இதில் நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.