கடலூர், மார்ச் 5- கும்பல் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. இச் சங்கத்தின் மூன்றாவது மாநாடு பண் ருட்டியில் நடைபெற்றது. வழக்கறிஞர் இத யத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் வி.உதயகுமார், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநி லத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் இஸ்லாமிய அறக்கட்டளை செயலாளர் ஜாஹிர் உசேன், பங்குத்தந்தை மரிய ஆனந்தராஜ், திவ்ய நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும், கும்பல் படுகொலை களை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும், பண்ருட்டி நகரில் கிறிஸ்தவர்க ளுக்கு கல்லறை தோட்டம் அமைக்க உடனே நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் கடலூர் மாவட்டத் தலைவராக அப்துல்அமீது, செயலாளராக வி.உதயக் குமார், பொருளாளராக எஸ்.எஸ் ராஜ் ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்