tamilnadu

கொரோனாவிற்கு கூடுதல் மருத்துவமனைகளில் சிகிச்சை: கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர், மே 6- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் தெரி வித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் புதனன்று (மே 6) செய்தியாளர்களிடம் கூறுகை யில், கோயம்பேட்டிலிருந்து வந்த 815 பேரை பரி சோதித்தத்தில் 229 நபர்களுக்கு ( மே 6 நிலவரம்) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 137 பேருரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டுமின்றி கடலூர், சிதம்பரம்,  விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய அரசு மருத்துவ மனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத 449 பேரும் தனிமை முகாமிலே தங்க வைக்கப்பட்டு அவர்க ளுக்கும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. இதர மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்துள்ள 475 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்  பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க கிராமங்க ளில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில்  கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் 900 படுக்கை வசதி  உள்ளது.  மேலும்,  மாணவர் விடுதி,  தனியார் கல்லூரி விடுதி,  லாட்ஜ் ஆகிய  கூடுதலாக ஆயிரம் படுக்கைகள்  அமைக்க முடியும். கிராமங்களில் நோய்த்தொற்றுக்கு  உள்ளானவர்களை புறக்கணிக்காமல் அவர்க ளுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

;