tamilnadu

img

கையெழுத்து இயக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் துவக்கி வைத்தார். திமுக நகரச் செயலாளர் செங்கல்வராயன், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், விசிக பாராளுமன்றச் செயலாளர் தாமரைச்செல்வன், தி.க மாநிலச் செயலாளர் துரை.சந்திரசேகர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.பி.தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.