tamilnadu

img

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறைகேடு ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் புகார்

கடலூர், ஜூலை 14- பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் முறை கேடு நடந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்கத்தின் சார்பில்  புகார் தெரி விக்கப்பட்டது. இதுகுறித்த புகார் மனுவை சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ணன், பொரு ளாளர் ஆர்.கலைச்செல்வன், வட்டச் செயலாளர் டி.எம்.பாண்டியன், பொருளா ளர் டி.சண்முகம் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்தனர். திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றி யத்திற்குட்பட்ட கொரக்கவாடி பஞ்சாயத்தில்  பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் இறந்த வர் பெயரில் வீடுகட்டி பணத்தை எடுப்பது, பலரது கட்டாத வீட்டை கட்டியதாகவும், கூரை  வீட்டில் வசிப்பவருக்கு வீடு கட்டியதாக வங்கிக் கணக்கில் வரவு வைத்து அந்த பணத்தை எடுத்து தரச் சொல்லி மிரட்டு வது, 10க்கும் மேற்பட்டவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து முறைகேடாக பணத்தை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு வகையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. கொரக்கவாடி ஊராட்சி மன்றத் தலைவர்,  செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் கூட்டாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆதாரத்துடன் அந்த  மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணி கள் நடைபெறாமலேயே, பணிகள் நடை பெற்றதாக 50க்கும் மேற்பட்டோர் பெயரில்  பஞ்சாயத்து தலைவர் பணம் எடுத்து முறை கேட்டில் ஈடுபட்டுள்ளார். விளையாட்டு மைதா னத்தை முறையாக அமைக்காமல் கூடுதல் நிதியை பெற்று ஊழல் செய்துள்ளனர். இவர்  கள் மீது முறையாக விசாரனை நடத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

;