tamilnadu

img

புத்தகத் திருவிழாவில் கோளரங்கம்

கடலூர், அக்.16- கடலூரில் நடைபெற்று வரும் குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் குழந்தைகள் கண்டுகளிக்க கோளரங்கம் திறக்கப்பட்டது. தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக  முன்னாள் குடியரசுத் தலை வர் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளிடம் அறிவியல் தொடர்பான எண்ணத்தை வளர்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கோள ரங்கை மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ம. ஸ்ரீஅபிநவ் தொடங்கி வைத்து புத்தகக்  கண்காட்சியை பார்வை யிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டார்.  விழாவில் அவர் பேசுகை யில், “மாணவர்கள் செல்லி டப்பேசி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளம், கணி னியை விடுத்து புத்தகங்  களை வாசிக்க வேண்டும்” என்றார். அதனைத் தொடர்ந்து ‘விஞ்ஞானியுடன் சந்திப்பு’ நிகழ்ச்சி நடந்தது. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ராஜசேகர் பங்கேற்று ராக் கெட் தொழில்நுட்பம், புத்த கம் வாசிப்பு குறித்து பேசி னார்.  தொடர்ந்து மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நம்ம கட லூர் அமைப்பின் தலைவர் டி.சந்திரசேகர், நிர்வாகி நெல்சன், எடிஃபை பள்ளி  எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்றாவது நாளாக புதன்கிழமை விளையாடு விஞ்ஞானம் என்ற தலைப்  பில் டாக்டர் கோவிந்தனுடன் சந்திப்பு நிகழ்ச்சியும், தனித் திறன் போட்டிகள், தீயற்ற சமையல் போட்டிகள், கலை நிகழ்சிகள் நடைபெற்றன.

;