கடலூர், டிச. 10- கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கொரக்கவாடி கிராம மக்கள் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் வட்டத் தலைவர் ஆர்.பாண்டியன் தலைமையில் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்ப தற்காக வந்திருந்தனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அவர் கள் தங்களது மனுக்களை அதற்கென தனியாக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர். மனுவில், கொரக்கவாடி கிராமம் எம்ஜிஆர் நகரில் 67 குடும்பத்தினர் வீட்டு மனைப் பட்டா இல்லாமல் வசித்து வருகின்ற னர். இதில், 35 குடும்பத்தினர் பெருமாள் கோவில் பெயரில் உள்ள இடத்தில் 40 ஆண்டுகளாக வீட்டுவரி செலுத்தி வசித்து வரு கின்றனர். எனவே, இவர்களை எக்காரணம் கொண்டு வெளியேற்றாமல், கோயில் நிர்வாகம் கட்டச் சொல்லும் தீர்வையை கட்டி விடுகிறோம். இதேப்போன்று, 32 குடும்பத்தினர் அரசின் நந்தத்தில் நிரந்தரமாக வீட்டு வரி செலுத்தி வசித்து வருகின்றனர். ஆனால், கிராம நிர்வாக பதிவேட்டில் எம்ஜிஆர் நகரிலுள்ள அனைத்து கணக்குகளும் தவறுதலாக மாறி மாறி இடம் பெற்றுள்ளன. எனவே இதனை சரி செய்ய வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணை யின் படி நீண்ட காலமாக குடியிருப்போருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 67 குடும்பத்தினருக்கும் உரிய பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்தப்பட்டிருந்தது.