கடலூர், நவ. 5- கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் அந்தமானுக்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த மண்டலம் இன்று (புதன்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகுவதோடு, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரி வித்துள்ளது. இந்தப்புயல் மேற்கு வங்கம் அல்லது ஒடிசா அல்லது பங்களாதேஷ் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு புயல் தூர எச்சரிக்கை கொடி எண்.1 ஏற்றப்பட்டது. இது வங்கக்கடலில் தூரத்தில் புயல் உருவாகியிருப்பதை குறிக்கும் எச்சரிக்கை என்று கடலூர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.