tamilnadu

பழிவாங்கும் போக்கை என்எல்சி கைவிட வேண்டும்: சிஐடியு

கடலூர், மே 6-என்எல்சி நிறுவனம் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வரும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று சிஐடியு கடலூர் மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு துணைத் தலைவர் எல்.திருஅரசு மீது என்எல்சி நிர்வாகம் தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது சிஐடியு சங்கம் உறுதியாக போராடுவதால், முன்னணி தலைவர் திருஅரசை வேண்டும் என்றே பழி வாங்கி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளில் 4 முறை இடமாற்றம் செய்துள்ளனர். முகநூல் பதிவில் நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட் டார் எனக்கூறி குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து விசாரணையை நிலுவையில் வைத்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பர்ஷங்டருக்கு திடீர் என இடமாற்றம் செய் துள்ளது என்எல்சி நிர்வாகம். என்எல்சி வரலாற்றில் இதுவரை எந்த தொழிலாளியும் அவரது விருப்பம் இல்லாமல் அண்டை மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ததில்லை. நிறுவனத்தின் இந்த நடவடிக்கை முழுக்க தொழிற் சங்க விரோத நடவடிக்கையாகும். இந்த பணிமாற்ற உத்தரவை ரத்து செய்து என்எல்சி நிறுவனத்தில் தொழில் அமைதிக்கு நிறுவனம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பணி மாறுதலை திரும்பப் பெறவில்லை என்றால் மே 8 ஆம் தேதி நெய்வேலியில் உண்ணாநிலைப் போராட் டத்தை நடத்துவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.கடலூரில் மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமையில் நடந்த சிஐடியு மாவட்டக்குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

;