tamilnadu

மோடி, விஜயகாந்தை தவிர்க்கும் பாமக விளம்பரங்கள் அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

கடலூர், ஏப்.7-

கடலூர் தொகுதியில் மோடி, விஜயகாந்த் பெயர்கள் சுவர் விளம்பரங்களில் தவிர்க்கப் படுவதால் கூட்டணி கட்சியினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி என்றும் தமிழகத்தில் அதிமுக கூட்டணி என்றழைக்கப்படும் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 7 கட்சிகள் போட்டியிடுகின்றன.இதில், கடலூர் மக்களவைத் தொகுதியில் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக மருத்துவர் இரா.கோவிந்தசாமி போட்டியிடுகிறார். பாமக வேட்பாளருக்கு ஆதரவாக விருத்தாசலம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திரமோடி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பெயர்கள் தவிர்க் கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.முதனை கிராமத்தில் சில வீடுகளின் சுவர்களில் அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் பாமக நிறுவனர் மற்றம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் ஆகியோரை மட்டும் எழுதி, மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டுள்ளனர். விஜயகாந்த், மோடியின் பெயர் இல்லை.விருத்தாசலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு, சட்டப் பேரவைத் தேர்தலின் போது விஜயகாந்த் போட்டியிட்டு, தற்போது கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ஆர். கோவிந்தசாமியை 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டும் தேமுதிகவே வென்று தொடர்ந்து இருமுறை அத்தொகுதியை கைப்பற்றியது. விஜயகாந்த் பெயர் தவிர்க்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங் களை முன் வைத்துள் ளது. இந்திய அளவில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பிரதமர் மோடியின் பெயர் இடம் பெறவில்லை. மோடிக்கு இருக்கும் அவிற்கு அதிகமான எதிர்ப்பின் காரணமாக அவரின் படமோ, பெயரோ போட்டால் பாமகவிற்கு வாக்கு விழாது என்ற காரணத்தினால் விடுபட்டிருக்கலாம் என கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ந.நி

;