tamilnadu

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அனைத்து அரசியல் கட்சிகள், பொது மக்கள் முடிவு

திருப்பூர், ஆக. 30 - திருப்பூர் சிங்காரவேலன் நகரில் பொது மக்கள் குடியிருப்பு மற்றும் பள்ளிக் கூடத்திற்கு அருகில் இருக்கும்  மதுபானக் கடை மற்றும் பார் ஆகியவற்றை மூடக்கோரி ஏழு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்து அரசியல் கட்சிகள், பொது மக் கள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு சிங்காரவேலன் நகரில் டாஸ்மாக் கடை எண் 1985 மற்றும் மதுபானக் கூடம் உள்ளது. இதன் அருகிலேயே 4 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளியும், மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளும், பனியன் தொழிற் சாலைகளும் உள்ளன. போக்குவரத்து நெருக் கடி மிகுந்த இப்பகுதியில் உள்ள இக் கடையை அகற்றக்கோரி தொடர்ச்சியாக பல கட்டப் போராட்டங்களை அரசியல் கட்சிக ளும், பொது மக்களும் இணைந்து நடத்தி வரு கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இக்கடையை மூடுவதற்கு மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டபோதும் அதைப் பொருட் படுத்தாமல் சிங்காரவேலன் நகர் கடை, மது பானக் கூடம் தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட்டு வருகிறது. முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் பரிந்துரைக் கடிதம் கொடுத் ததுடன், மாவட்ட ஆட்சியரும் கடையை மூட உத்தரவிட்டும் தொடர்ந்து இதே இடத்தில் கடையை நடத்தி வருவதால் டாஸ்மாக் நிர்வாகத்தைக் கண்டித்து செப்.2 ஆம் தேதி (புதனன்று) இப்பகுதியில் ஏழு இடங்களில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்து வது என்று அனைத்து அரசியல் கட்சிகள், குடி யிருப்போர் நலச் சங்கம் மற்றும் பொது மக்கள் தீர்மானித்துள்ளனர்.