tamilnadu

img

பொது மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிடுக!

சிபிஎம் வலியுறுத்தல்

விருதுநகர், மார்ச்.26- விருதுநகர் மாவட்டம் முழுவதும் பொது மக்க ளுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொ ருட்கள் அதிக விலையின்றி  எளிதில் கிடைத்திட தன்னார்வ குழுக்களை அமைத்து விநியோகம் செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன் அறிக்கை வெளி யிட்டுள்ளார். அதில் கூறிய தாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்திட தமிழக அரசு பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள், தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்க கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டுகளுக்குச் சென்றனர்.  இதனால், கடை வியா பாரிகள் காய்கறிகளின் விலையை பல மடங்கு உயர்த்தினர். சிறிய வெங்கா யம் கிலோ ரூ.110, பிற காய்கறிகள் கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டு வருகிறது. எனவே, சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் பாதிப்ப டைந்து வருகின்றனர்.

இந்தநிலையில், விருது நகர் மாவட்ட ஆட்சியர் இரா. கண்ணன் பத்திரிகையா ளர்கள் சந்திப்பின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவ டிக்கைகளை செவ்வாயன்று  தெரிவித்துள்ளார். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், நடமாடும் வாகனங்கள் மூலம் பகுதி வாரியாக பொது மக்களு க்கு வழங்கப்படும் என அறி வித்திருந்தார். அது தற் போது வரை நடைமுறைக்கு வரவில்லை. எனவே, காய்க றிகளின் விலையை வியா பாரிகள் குறைக்காமல் அதிக லாபத்திற்கே விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காய்கறி உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் பொது மக்கள் வசிக்கும் பகுதியில் குறைந்த விலை யில் கிடைத்திட உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். இதற்கான தன்னார்வ குழுக்களையும் ஏற்பாடு செய்திட வேண்டும்.

மேலும், முறைசாரா மற்றும் கட்டுமான தொழி லாளர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் ஆகி யோருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை எளிதில் கிடைத்திட உரிய நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.