tamilnadu

img

கடலூரில் வாழ்வுரிமை, கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு

சிதம்பரம், ஆக.16- கடலூர் மக்களின் வாழ்வுரிமையையும், கருத்துரிமையையும் காத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதுகாப்பு மாநாடு  நடத்தப்படும் என்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் மேலும்  கூறுகையில்,  கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில்  1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அர்பணிப்பு, பங்களிப்பு, மக்கள் பிரச் சனை பிரச்சார இயக்கம், நூல் வெளியீட்டு விழாவும் நடத்தப்படுகிறது என்றார். அதன் ஒரு பகுதியாக இம் மாவட்டத்தின்  முக்கிய பிரச்சனையான ஹைட்ரோகார்பன் திட்டம், ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனத்திற்கு  அனுமதி கொடுத்தது கண்டிக்கதக்கதாகும் என்றும் அவர் கூறினார். கடலூர் மாவட்டத்தில் சொத்துவரி, தொழில்வரி பலமடங்கு உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் வியாபாரிகள், ஏழை, நடுத்தர  மக்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ள னர்.  அம்பிகா சர்க்கரை ஆலை முதலாளி விவ சாயிகளின் பெயரில் கடன் வாங்கியுள்ளார். இதில் விவசாயிக்கும் அந்த கடனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் வங்கியிலிருந்து விவசாயிகளுக்கு கடனை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில்  ஆலை முதலாளி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்  துள்ளார். அவரது சொத்தை பறிமுதல் செய்ய  வேண்டும். வங்கிகள் விவசாயிகளிடம் கடனை கேட்பதை தடுக்க தமிழக அரசு தலை யிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தினார்.