tamilnadu

img

குடும்பத்திற்காக சமுதாயத்தையே காவு கொடுத்தவர் ராமதாஸ் கடலூர் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

கடலூர், ஏப். 5-

தன் குடும்பத்திற்காகவும், தன் மகனுக்காகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையே காவு கொடுத்தவர்தான் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்று கடலூர் மாவட்ட பிரச்சாரக் கூட்டங்களில் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். கடலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் டி.வி.ஆர்.எஸ்.ரமேஷ் அவர்களை ஆதரித்து கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்ட கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், “ கடந்த 7 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த மனுக்களையும், அறிக்கைகளையும் புத்தகமாக போட்டு மக்களுக்கு விநியோகிக்க தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.அதிமுக, பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்ததில் தேச நலன் உள்ளதா? அல்லது மக்கள் நலன் தான் இருக்கிறதா? என்று ராமதாஸால் சொல்ல முடியுமா? முடியாது? காரணம், சொந்த நலன்தான் இருக்கிறது. அதாவது மகன் அன்புமணியை மத்தியில் அமைச்சராக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கம் என்றும் கடுமையாக சாடினார்.மரக்காணம் முதல் பரங்கிப் பேட்டை வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தையும், மீன்பிடி தொழிலையும் அழிப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் துடித்துக் கொண்டு உள்ளன. அந்த திட்டத்தை எதிர்த்தவர் ராமதாஸ். இன்றைக்கு அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது எப்படி? நாங்கள் கூட்டணியில் உள்ளதால் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று கூற முடியுமா? 8 வழிச் சாலைக்கு நீதிமன்றம் வரை சென்று தொகுதி மக்களை சந்தித்த அன்புமணி இனிமே 8 வழிச் சாலை வராது என்று சொல்ல முடியுமா? என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.60 ஆண்டுகால என் அரசியல் வரலாற்றில் எடப்பாடி பழனிசாமி போல் ஒரு சிறந்த முதல்வரை நான் பார்த்ததில்லை என்று கூறும் ராமதாஸ், மூன்று மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் 13 பேரை எடப்பாடி அரசு சுட்டுக் கொன்ற போது கொலைகார முதல்வர் பழனிசாமி என்றும் அந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறியவர் தான் இந்த ராமதாஸ்.பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே கட்சி நடத்துகிறேன் என்று கூறும் ராமதாஸ், அந்த மக்கள் எப்படி போனாலும் பரவாயில்லை. என் குடும் பமும் மகன் அன்புமணியும் வாழ்ந் தால் போதும் என்று முடிவு செய்துவிட்டார் என்று பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

;