tamilnadu

பிரச்சார இயக்கத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு: சிபிஎம் கண்டனம்

கடலூர், ஜூன் 18- கடலூர் மாவட்டத்தில் ஜனநாயகப்பூர்வ மான இயக்கங்களுக்கு கூட அனுமதி இல்லை என்ற காவல்துறையின் செயல்பாட்டுக்கு  மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமலாக்கு வதற்கு முன்பு பொது மக்களின் கருத்தை அறிய வலியுறுத்தி இம்மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம், நோட்டீஸ் விநியோகம் செய்வது என மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அதன டிப்படையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்ப ரம், பரங்கிப் பேட்டை, புவனகிரி, குறிஞ்சிப் பாடி, கடலூர் ஒன்றியம், குமராட்சி, கீரப் பாளையம் ஆகிய பகுதிகளில் நடந்த தடுப்பு களை ஏற்படுத்தி காவல்துறையினர் பிரச்சா ரத்தை தடை செய்தனர். ஒலிபெருக்கி உரிமையாளர்களை மிரட்டி யுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வருபவர்  களை திரும்பச் செல்லுங்கள் இல்லை என்றால் நீதிமன்றத்தில் தான் உங்கள் வாக னத்தை எடுக்க வேண்டி வரும், உங்கள்  மீது வழக்கு போடுவோம் என்றும் மிரட்டி யுள்ளனர். அவசர நிலை பிரகடனத்தைப் போன்று  2 பேருக்கும் மேல் கூட்டம் கூடக் கூடாது எனவும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலா ளர் டி.ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், “டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திரு வாரூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் பல  இடங்களில் இந்த இயக்கம் நடைபெற்றுள் ளது. கடலூர் மாவட்டத்தில் பிரச்சார இயக் கத்தை நடத்த விடாமல் தடை செய்து, மிரட்டிய காவல்துறை வண்மையாக கண்டித்துள்ளார். மக்கள் பிரச்சனையை அரசு, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் இதுபோன்ற இயக்கத்தை தடை செய்வது அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜன நாயக உரிமைகளை பறிப்ப தாகும். மக்கள்  நலனுக்காக, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க  காவல்துறை எப்படி அயராது பணியாற்று கிறதோ, அதுபோலவே மார்க்சிஸ்ட் கட்சி யும்  மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க, உழைப்  பாளி மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவதை தடைசெய்வது ஏற்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் தெரி வித்திருக்கிறார். இப்பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பா ளரை சந்தித்த மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம் கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளார்.  மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் ஆகியோர் உடனிருந்தனர்.

;