சிறுமி பலாத்காரம்: எம்பிஏ பட்டதாரிக்கு 10 ஆண்டு சிறை
கடலூர், டிச.7- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எம்பிஏ பட்டதாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெரிய கொசப்பள்ளத்தைச் சேர்ந்த வர் முருகேசன் மகன் கும ரேசன் (29) எம்பிஏ பட்டதாரி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 வயது குழந்தையும் உள்ளனர். 3.7.2018 அன்று அவரது உறவினர் தனது 5 வயது மகளை குமரேசன் வீட்டில் விட்டுவிட்டு மற்றொரு உற வினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுள் ளார். அப்போது, குமரேச னின் மனைவி குழந்தைப் பேறுக்காக அதேப்பகுதி யிலுள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியை குமரேசன் பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் சிறுமி தெரிவித்தைத் தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த னர். இந்த வழக்கின் விசா ரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது இந்த வழக்கில் நீதிபதி எம்.மகாலட்சுமி வழங்கிய தீர்ப்பில், சிறுமியை பாலி யல் பலாத்காரம் செய்த கும ரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் வித்தார். இதனையடுத்து, அவர் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார். இதுகுறித்து அரசுத்த ரப்பு வழக்குரைஞர் க. செல்வப்பிரியா கூறுகை யில், இந்த வழக்கில் புகார் அளித்த சிறுமியின் தாயார், அவரது பாட்டியே பிறழ் சாட்சியம் அளித்தனர். எனி னும், பாதிக்கப்பட்ட சிறுமி யின் வாக்குமூலமும், மருத் துப் பரிசோதனை அறிக்கை யும் முக்கிய சாட்சியங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார்.
தைப்பூச விழாமேல்மருவத்தூரில் ஒரு நிமிடம் ரயில் நிற்கும்
மதுரை, டிச.7- மேல்மருவத்தூர் தைப் பூச விழாவை முன்னிட்டு டிசம்பர் 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை மேல்வருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் ரயில்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் விபரம்:- மேல்மரு வத்தூர் தைப்பூச விழாவை முன் னிட்டு டிசம்பர் 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர் வழியாகச் செல்லும் மதுரை-சென்னை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-தாம்பரம் அந்தி யோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள். டிசம்பர் 20-ஆம் தேதி முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை மும்பை குர்லா-மதுரை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில்-சென்னை எழு ம்பூர் எக்ஸ்பிரஸ், கன்னியா குமரி-நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில்கள். டிசம்பர் 20-ஆம் தேதி முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் சென்னை-மது ரை-சென்னை வைகை எக்ஸ்பி ரஸ், சென்னை-செங் கோட்டை பொ திகை எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாக ர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பி ரஸ் ரயில்கள். டிசம்பர் 21-ஆம் தேதி முதல் பிப்ரவரி 8-ஆம் தேதி வரை டில்லி நிஜாமுதீன்-கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ், மதுரை-மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள். டிசம்பர் 22- ஆம் தேதி முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை மதுரை-டில்லி நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்கள். டிசம்பர் 26-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை சென்னை எழும்பூர்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் கள் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமி கள் ஆராதனை விழாவை முன்னி ட்டு டிசம்பர் 13-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை மைசூ ரிலிருந்து புறப்படும் மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில், டிசம்பர் 14-ஆம் தேதி முதல் டிசம்பர் 21-ஆம் தேதி வரை தூத்துக்குடியிலிருந்து புறப்படும் தூத்துக்குடி-மைசூர் விரைவு ரயில், டிசம்பர் 17-ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து புறப் படும் கோயம்புத்தூர்-இராமேஸ்வ ரம் விரைவு ரயில், டிசம்பர் 18-ஆம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் இராமேஸ்வரம்-கோயம்புத்தூர் விரைவு ரயில் ஆகியவை ஊஞ்சலூர் ரயில்நிலை யத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.
நீட் ஆள் மாறாட்ட வழக்கு: இடைத்தரகர்கள் இருவர் கைது
தேனி, டிச. 7- நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் மாண வர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், முஹ மது இர்பான், மாணவி பிரியங்கா, அவர்க ளது பெற்றோர் உள்ளிட்ட பத்து பேரை சிபி சிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ள னர். இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்துக்கு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. அவரது தந்தை ரவிக் குமார் கைது செய்யப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீட் முறைகேடு வழக்கில் கைதான மாண வர்கள் அனைவரும் சென்னையில் செயல் பட்டு வந்த அங்கீகாரம் ரத்து செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி ஒன்றில் படித்த வர்கள் என்பதும், ஒரே இடைத்தரகர் மூலம் மருத்துவப் படிப்பு சேர்க்கை பெற்றிருந்ததும் சிபிசிஐடி காவல்துறையினரின் விசாரணை யில் தெரிய வந்தது. மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இடைத்தர கர் ரஷீத் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் சிலரையும் சிபிசிஐடி காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், இடைத்தரகர் ரஷீத் என்பவருக்கு உடந்தை யாக இருந்த தர்மபுரி முருகன், விஸ்வநாத் ஆகியோர் வெள்ளியன்று கைது செய் யப்பட்டனர். இருவரும் பெங்களூருவில் பதுங்கி யிருந்தபோது சிக்கியதாக சிபிசிஐடி காவல் துறையினர் கூறினர். முருகன், விஸ்வநாத் ஆகியோரை தேனி சிபிசிஐடி அலுவல கத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.