tamilnadu

img

கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிதம்பரம் பத்திரிகையாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொரோனா தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் செவ்வாயன்று (மார்ச் 24) நடைபெற்றது. இதில் சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன், சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் தமிழரசன், தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சங்க மாநிலச் செயலாளர் வெங்கடசுந்தரம் ஆகியோர் பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கை சோப்புகள் வழங்கப்பட்டது.