tamilnadu

img

பிரச்சாரம்....

புதுச்சேரி- காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நான்காவது நாளாக  பாகூரை அடுத்துள்ள பனித்திட்டு, நரம்பை ஆகிய மீனவர் கிராமங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது. பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வி.பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன்,பிரபுராஜ், பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி, உலகநாதன், கலியன், இளவரசி, சரவணன் மற்றும் முத்துலிங்கம்.செல்வராசு.அரிதாஸ் உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

***************

காவல்துறை அடாவடி....

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, டி.நெடுஞ்சேரி (கீரை ஒன்றியம்), குறிஞ்சிபாடி ஆகிய பகுதிகளில் தடையை மீறி மறியல் பேராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மக்களிடம் துண்டு பிரசுரம் கொடுக்கக் கூட அனுமதிக்காமல் காவல்துறையினர் அத்துமீறி கைது செய்தனர்.