tamilnadu

img

சிதம்பரத்தில் மீண்டும் தலைதூக்கும் வெடிகுண்டு கலாச்சாரம்

சிதம்பரம்,ஆக.21- சிதம்பரம் அண்ணா மலை நகர் கலுங்குமேடு பகு தியை சேர்ந்தவர் பிரபல ரவுடிகோழி பாண்டியன்(40). இவர் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. இவர், அண்ணாமலை நகர்  ராஜா முத்தையா மருத்துவ மனை அருகில் உள்ள ஒரு  ஹோட்டலில் செவ்வாய்க் கிழமை இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கோழி பாண்டியன்மீது வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஒடி விட்டனர்.  இத னால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் சரக துணைக் காணிப்பாளர் கார்த்திகேயன், அண்ணா மலை நகர் ஆய்வாளர் முரு கேசன் மற்றும் காவலர்கள்  பார்வையிட்டு பாண்டியனின்  உடலைக் கைப்பற்றி விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த படுகொலை காரண மாக சிதம்பரம், அண்ணா மலை நகர் பகுதியில் பதட்டம்  ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி யில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள் ளது. சம்பவம் நடந்த இடத்  தில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  கலுங்குமேடு பகுதி யைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் குமார், மற்றும் அவரது தம்பி  ராஜேசை பிரபல ரவுடிகள் கொலை செய்வதற்கு மாரி யப்பா நகரில் வெடிகுண்டு  செய்த போது அதுவெடித் தது. அதன் பிறகு, ஒருவாரம்  கழித்து  அவரது வீட்டில் வெடி குண்டு வீசி இருவரின் கழுத்தை அறுத்து  ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முன்பு வைத்து சென்றார்கள். இந்த சம்பவத்திற்கு அப்போது பக்கத்து வீடான கோழி பாண்டியன் தான் கொலையாளிகளுக்கு அனைத்து தகவல்களை யும் திட்டமிட்டு கொடுத்துள்ள தாக தகவல். இதனால் கோழி  பாண்டி யனை தற்போது  அந்த இரட்டைக் கொலை யின் எதிரொலியாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவக் கல்லூரி யில் ஆம்புலன்ஸ் ஓட்டுவ தில் ஏற்பட்ட பிரச்சனை  மற்றும் தொழில் போட்டி யால்  கொலை செய்யப் பட்டுள்ளாரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.