கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் முழுவதுமாக முடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 46 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அர சின் நிவாரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் 24ஆம் தேதி மாலை முதல் ஊர டங்கும், தமிழகத்தில் 144 தடை உத்தர வும் அமலில் இருந்து வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் மே 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிக்கப்படும் நிலை உள்ளது.
இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. அவர்களுக்கு கொரோனா தடையோடு வழக்கமாக ஆண்டுதோறும் விதிக்கப்படும் மீன்களின் இனப் பெருக்ககால தடையும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தத் தடை ஜூன் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்படி கடலூர் மாவட் டத்தில் 49 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் நேரடி யாகவும், மறைமுகமாக 1 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்படும் மீனவர்க ளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத் தில் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் 14 ஆயிரம் பேருக்கு தடைக்காலத்திற்கான நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநர் காத்தவராயன் கூறி யுள்ளார்.
மீனவர்களுக்கான நலவாரி யத்தில் உறுப்பினர்களாக உள்ள உள்நாடு மற்றும் கடல்சார் மீன்பிடித் தொழிலாளர்கள் 32,600 பேருக்கு ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீனவர் கிராமத்தினர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தொழிலுக்குச் செல்லாத தால், 500 எஸ்டிபி இயந்திர படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் 600 பைபர் படகு களில் 5 நாட்டிக்கல் மைல் தூரத் திற்குள் மீன்பிடிக்க அனுமதிக்கப்ப டும் என மத்திய அரசு அறிவித்தி ருந்தது. பிடிபடும் மீன்களை ஏலம்விடக் கூடாது, சமூக விலகலை கடைப்பிடித்தல் வேண்டும், படகில் அதிகபட்சம் 3 பேருக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாட்டினை விதித்து காவல்துறையினர் மீன்பிடி தொழிலை முற்றிலுமாக முடக்கி விட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.
மீனவர்களுக்கு வழங்கும் நிவார ணத்தை கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அதேநேரத்தில், அதன் உபத் தொழி லான கூடையில் தலையில் சுமந்து மீன்விற்கும் பெண்கள், ஐஸ் போக்ட ரியில் வேலை செய்யும் தொழிலா ளர்கள், படகு பழுது பார்போர், மீன் ஏற்றும் தொழிலாளர்கள் இப்படி பல்லாயிரக்கனக்கான தொழிலா ளர்களின் வாழ்வாதாரமும் பாதிக் கப்பட்டுள்ளது. எனவே அவர்க ளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சிவபாலன்