tamilnadu

img

கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு 25 சதம் கூலி உயர்வு வழங்குக!

கடலூர், ஜூன் 8- கைத்தறி நெசவு தொழி லாளர்களுக்கு 25 சதம் கூலி  உயர்வு, பஞ்சப்படி வழங்க  வேண்டும் என்று கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு  பாவு பட்டரை தொழிலாளர் சங்கத்தின் 7ஆவது மாவட்ட  மாநாடு வலியுறுத்தியுள்ளது. நடுவீரப்பட்டில் நடந்த மாநாட்டிற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் எஸ்.தட்சி ணாமூர்த்தி தலைமை தாங்கி னார். அருணாசலம் கொடி யேற்றினார். இ.தயாளன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜி. கணேசன் வரவேற்றார்.  மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செய லாளர் டி.பழனிவேல் மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார்.  செயலாளர் வி. ரங்கநாதன் வேலை அறிக் கையை சமர்ப்பித்தார். பொருளாளர் ஆர்.கல்யாண சுந்தரம் வரவு செலவு  அறிக்கையை சமர்ப்பித்தார்.  மாநாட்டில் சிஐடியூ மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்  கரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார், மின் ஊழியர் மத்திய அமைபின் மாநிலச் செய லாளர் தேசிங்கு ஆகியோர் வாழ்த்தி  பேசினர். சிஐடியு  மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கே.அருள் நன்றி கூறினார். மாத ஓய்வூதியம் ரூ. 4,000 வழங்க வேண்டும், 50  வயது நிறைவடைந்த பெண்  தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். நல வாரியத்தில் ஒரு வருடமாக முடங்கியுள்ள  ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். திரு மணம் மற்றும் கல்வி உத வித் தொகையை இரட்டிப் பாக்க வேண்டும். வேஷ்டி சேலை மற்றும் சீருடை ரகங்  களை உற்பத்தி செய்யும்  பெடல் தறி நெசவாளர்க ளுக்கு 40 விழுக்காடு கூலி  உயர்வு, நூல் பாவு தட்டுப்  பாடின்றி கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய மாவட்டத் தலை வராக ஆர்.ஆளவந்தார், மாவட்டச் செயலாளராக எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்டப் பொருளாளராக இ.தயாளன் உள்ளிட்ட 19 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

;