tamilnadu

img

தூத்துக்குடியில் கடற்படை போர்க் கப்பல்

ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவர்கள்

தூத்துக்குடி, டிச.15- தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ள இந்திய கடற்படை போர்க் கப்பலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஆண்டுதோறும் டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டா டப்படுவது வழக்கம். இதையொட்டி நடைபெறும் கடற்படை வார விழா வில் இந்திய கடற்படையின் வலிமை, செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் போர்க் கப்பல்களை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவியரும் அனுமதிக்கப்படுவர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வஉசிதம்பரனார் துறைமுகத்திற்கு P58 சுமேதா எனும் இந்திய கடற்படை போர் கப்பல் வந்தது.

இந்த கப்பலை பார்வையிடுவதற் காக இன்றைய தினம் பள்ளி மாணவ  - மாணவியருக்கு அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து பள்ளி மாணவ - மாணவிகள் தங்களது ஆசிரியர்களுடன் வந்து போர் கப்பலை பார்வையிட்டனர்.  மேலும் கப்பலில் உள்ள  சாத னங்கள், போர்க்கருவிகள்,  தற்காப்புக்  கருவிகள் உள்ளிட்டவை குறித்தும் கேட்டறிந்தனர். கடற்படையின் சாத னைகளை விளக்கும்  வகையில் புகைப்பட கண்காட்சியும் வைக்கப் பட்டிருந்தது.